Thursday 24 March 2011

கோயில்களும் இன்றைய மக்களின் போக்குகளும்.I

               அன்று தொட்டு இன்று வரை கோயில்கள் என்றால் புனிதத்தன்மை வாய்ந்த ஒரு இடமாகத்தான் எல்லோராலும் போற்றப்பட்டு வருகின்றமை எல்லோரும் அறிந்ததே.ஆனால் இன்றைய நிலையில் அது சாத்தியமானதா என்பது கொஞ்சம் சந்தேகத்திற்கிடமாகத்தான் இருக்கின்றது.எல்லாக் கோயில்களையும் அப்படிக் கூறவில்லை.ஒரு சில கோயில்களில் அத்தகைய நிலை காணப்படுவது மறுக்கப்படவோ மறைக்கப்படவோ முடியாது என்பது உண்மை.இங்கு நான் கோயில்களை சுட்டிக் காட்ட விரும்பவில்லை.தேவையான சந்தர்ப்பத்தில் அதைச் சுட்டிக் காட்டக்கூட தயங்க மாட்டேன்.ஆனால் இப்போது அது தேவையில்லை என நினைக்கிறேன்.இங்கு நான் கூறப்போகின்ற விடயங்கள் நீண்ட காலமாக என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த சில நிகழ்வுகள். 

          முதலாவது,கோயிலுக்கு சென்று வணக்கத்தகுந்தவர்கள் யார் என்ற கேள்விக்கு பதில் தர வேண்டுமென்றால்.கோயில் என்பது எல்லோருக்கும் பொதுவான இடம் ஜாதி மத பேதமின்றி எல்லோரும் சென்று வழிபடலாம்.(தீட்டு உள்ளவர்களை தவிர) என்று கூறுவீர்கள்.ஆனால் நான் பார்த்த ஒரு கோயிலில் குறிப்பிட்ட சிலர் எப்போது பார்த்தாலும் கோயிலுக்கு உள்ளே வந்து வழிபட மாட்டாங்க வெளியிலேயே நிற்பாங்க.அப்போ ஊர் பெரியவங்க கிட்ட நான் கேட்டேன் ஏன் அவங்க அங்கேயே நிற்கிறாங்க என்று.குறைஞ்ச ஜாதிக்காரர் கோயிலுக்குள்ள வரக்கூடாது என்பது அவங்க ஊர் கட்டுப்பாடாம்.அப்போ நான் சின்னப் பொண்ணு என்றதால அப்படிக் கூறி சமாளிச்சிட்டாங்க.நானும் விட்டுட்டன்.
          அதே கேள்வியை நான் இப்போ கேட்டதுக்கு அதே பதிலைத்தான் சொன்னாங்க.நானும் கேள்வி கேட்டு அவங்ககூட வாதாடினேன்.அவர்களும் சமாளிப்பதற்கு ஏதேதோ காரணங்கள் சொன்னாங்க.இறுதியில் சொன்னாங்க  அது அந்தக்கால பெரியவங்க கட்டுப்பாடு போட்டாங்க நாம ஒன்றும் செய்ய முடியல என்று.நான் கேட்டேன் இப்போ நீங்கதானே பெரியவங்க நீங்க இந்த காலத்துக்கு ஏற்ப கட்டுப்பாட்டை மாற்றலாம்தானே என்று.இப்போ அவங்க வரவேணாம் என்று நாங்க சொல்லலைதானே வேணுமென்றால் அவங்க உள்ளே வரலாம்தானே என்றாங்க.அதை என்கிட்ட சொல்லி என்ன ஆவது?அவங்ககிட்ட சொன்னால் அவங்க உள்ளே வருவாங்கதானே.இவங்க மனசில தோன்றத அவங்க என்ன மையா போட்டு பார்க்கிறது?

         கடவுள் வந்து சொல்லிச்சா மேல் ஜாதிக்காரர்கள் மட்டும்தான் கோயிலுக்குள்ள வந்து என்னை கும்பிடனும் மற்றவங்க எல்லோரும் வெளியில நின்றுதான் கும்பிடனும் என்று.நீங்களா ஒரு சட்டம் போடுவீங்க அதுக்கு ஒரு சமாளிப்புக் கதை வேற.தங்களது குறிப்பிட்ட சில தேவைகளுக்கு மட்டும் அவர்களை பிரித்து வைக்கப்பட்ட கீழ் ஜாதிக்காரர்களது உதவி வேணும்.அப்பிடி என்றால் அந்த தேவைகளுக்கும் அவர்களை நாடாமல் தாங்களே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியதுதானே?அது அவங்க கௌரவப் பிரச்சனை.ஏன்னா அவங்கதான் உயர்ந்த ஜாதிக்காரர்களாச்சே.எப்படி அவங்க அதெல்லாம் பண்ணுவாங்க? 

       இப்படிப்பட்ட சமூகம் ஒன்றில் தானாக உணர்ந்து திருந்திக் கொள்ளணும்.அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.இல்லையேல் யாராவது இதனை அவர்களுக்கு உணர வைக்கணும்.மேல் ஜாதிக்காரர்களுக்கு ஒரு கடவுள் கீழ் ஜாதிக்காரர்களுக்கு வேறு கடவுளா?மனசிலே இவ்வளவு அழுக்குகளை வைத்துக்கொண்டு தாங்கள் மேல் ஜாதின்னு சொல்லிக்கொண்டு திரிகிறவர்களே கோயிலுக்கு உள்ளே போகலாம் என்றால் அவங்களால் கீழ் ஜாதின்னு ஒதுக்கி வைத்திருப்பவர்கள் உள்ளே சென்று வழிபடுவதை ஏன் தடுக்கணும்?இதை நாம சொல்லப்போனா திமிர்ல பேசுறா,பெரியவங்கள எதிர்த்து பேசுறா என்றெல்லாம் பெயர்.


அப்போ பூனைக்கு மணி கட்டப் போறது யார்...........?


கவனத்திற்கு:-
யாரையும் கேவலப்படுத்துவதோ,யார் மனதையும் புண்படுத்துவதோ என் எண்ணம் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தொடரும்....

17 comments:

இவற்றை உணரத் தொடங்கிய போது; கோவில் என்றதும் வெறுப்பு வரத் தொடங்கியது. பின் ஐயரே கோவில் கருவறையில் நடத்திய காமலீலையின் பின் ; கடவுள் பாவம் என்று அவர்மேலே அனுதாபம் வந்தது; கோவில்கள்; ஆத்மீகத் தலைவர்கள் அடிக்கும் கூத்தில் - அந்தப் பக்கம் பார்க்கவே பயத்தில் ஒதுங்கி விட்டேன்.
எல்லோருக்கும் உள்ச்சென்று வழிபட அனுமதியற்ற கோவில்களை ;நாம் தவிர்க்கத் தொடங்க வேண்டும்.
வருமானக் குறைவு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

@!* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றி.

@யோகன் பாரிஸ்(Johan-Paris)
எல்லோருக்கும் உள்ச்சென்று வழிபட அனுமதியற்ற கோவில்களை ;நாம் தவிர்க்கத் தொடங்க வேண்டும்- அப்படி கூறக் கூடாது அண்ணா.அத்தகைய சமூகத்தின் எண்ணங்களைத்தான் முதலில் மாற்ற வேண்டும்.

2011 மார்ச்சு 24ம் தியதி.

இன்று இப்படி ஒரு செயல் நடக்கிறதெனபது மெத்த வியப்பே.

எந்த ஊரில் ? ஈழத்திலா ?

இன்னும் எத்தனை நாள் ஆகுமோ இந்த நிலை மாற?

அப்போ பூனைக்கு மணி கட்டப் போறது யார்...........?
//

அதுதானே இங்கு பிரச்சினை ...

உங்கள் ஆதங்கம் நியாயமானதே.... இந்த நிலை விரைவில் மாறும் என்ற நம்பிக்கை உண்டு.

ஃஃஃஃஃஅப்போ பூனைக்கு மணி கட்டப் போறது யார்...........?ஃஃஃஃ

அட இந்தளவுக்க துணிஞ்ச பொண்ணா நீங்கள்... தொடருங்கள் தொடருங்கள்... தங்கள் சமூக அக்கறையை மெய்ச்சுகிறேன்... கட்டாயம் சமூகத்திற்க இது தேவையானவையே..

அப்போ பூனைக்கு மணி கட்டப் போறது யார்...........?/நல்ல அலசல்...

I cannot agree. Nowadays all are allowed inside Temples irrespective of caste and creed. Moreover anyone can perform prayers as they like. The only thing is that in modern days money is collected for Special Darisanam and those who pay more for abisekam etc. are paid more attention which is natural. An ordinary poor Devotee cannot draw much attention of Gurukkal. Leave about all this, do you think that God appears before anybody who merely enter the temples whether they are rich or poor. God is there to protect everybody and it is difficult to understand Him!

Yesterday I had given a comment regarding your temple entry article. It has not been published, why?

@MURUGANANTHAM,
சகோதரா நான் எல்லா கோயில்களும் அப்படி என்று சொல்லவில்லை.ஒரு சில கோயில்களைத்தான் குறிப்பிட்டுச் சொன்னேன்.நாகரிகம் மாறிய இன்றைய காலத்திலும் சமூக மூடப் பழக்கவழக்கங்கள் மாறவில்லையே என்ற ஏக்கம்தான். சிறு வயதிலிருந்தே பார்த்துப் பழகிய கோயில்,உறவுக்காரர்கள்.யாராவது இதற்கு தீர்வு பண்ண மாட்டாங்களா என்ற ஏக்கம்தான் இந்த பதிவை எழுத தூண்டியது.

MURUGANANDAM says: 19 March 2012 11:02 Reply
Yesterday I had given a comment regarding your temple entry article. It has not been published, why?

மன்னிக்கவும் சகோதரா.இரவு நேரம்தான் வலையைப் பார்வையிடுவது வழக்கம்.அதனால்தான் உங்கள் கருத்தை வெளியிட முடியவில்லை.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா.

எல்லோரும் சேர்ந்து பூனைக்கு மணியை கட்டுவோம். உங்கள் சமுதாய மேம்பாட்டு பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

ஜாதி கொடுமைகள் இந்த காலத்திலும் கூட நடந்து கொண்டு இருப்பதை நினைக்கும் போது வருத்தமாகத்தான் உள்ளது ,கோவில்கள் பற்றிய என் கவிதை பதிவை இந்த முகவரியில் எழுதியுள்ளேன் நேரம் இருப்பின் வாசிக்கவும் :

http://kavithaicorner.wordpress.com/2011/12/10/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

ஜாதி கொடுமைகள் இந்த காலத்திலும் கூட நடந்து கொண்டு இருப்பதை நினைக்கும் போது வருத்தமாகத்தான் உள்ளது ,கோவில்கள் பற்றிய என் கவிதை பதிவை இந்த முகவரியில் எழுதியுள்ளேன் நேரம் இருப்பின் வாசிக்கவும் :
http://kavithaicorner.wordpress.com/2011/12/10/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More